எரிபொருளின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்துகட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்துசபை அறிவித்துள்ளது.
இதேவேளை, தனியார் பேருந்து கட்டணத்திலும் எவ்வித மாற்றங்களும்மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை தனியார் பேருந்துஉரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பதற்கு, பெட்ரோலின்விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் போதாது என அகில இலங்கைமுச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேனதெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின்விலையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் திருத்தம்மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.