புளியம்பொக்கணை பாலத்திற்கு அடியில் காணப்பட்ட உடல்கள் திருகோணமலையை சேர்ந்த இரு இளைஞர்களது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சி. பரந்தன் முல்லைத்தீவு ஏ– 35 வீதியில் அமைந்துள்ளபுளியம்பொக்கணை 10ஆம் கட்டை பாலத்திற்கு அடியில் இருந்து இருஆண்களின் சடலங்கள் இன்று (ஜனவரி02) மீட்கப்பட்டதுடன் அவர்கள்பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டது.
ஜெய்க்கா வீட்டுத்திட்டம் இக்பால் நகர் நிலாவளி பகுதியைச் சேர்ந்த அன்ரன்சாந்தன் (23வயது) அதே பகுதியைச் சேர்ந்த சசிகரன் சிம்புரதன் (வயது 21) ஆகிய இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட இரண்டு சடலங்களையும் சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான்
உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலங்களை உறவினர்களிடம்ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் இறந்தவர்களிடமிருந்துஒரு தொகை பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் புனரமைப்பு பணிகள்இடைநிறுத்தப்பட்ட பாலத்தின் உட்பகுதியில் விழுந்ததன் காரணமாக இருவரும்உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதுடன் இச் சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்