கிளிநொச்சி நகரில் கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி இடம் பெற்ற டிப்பர்மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாய் சிகிச்சை பலனின்றி இன்று (ஜனவரி02) பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
விபத்து சம்பவித்த அன்று இரண்டு வயது குழந்தை உயிரிழந்துடன் , தந்தை, தாய் , மகள் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த கஜன் யாழினி (வயது34 )என்ற இளம்தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.