காய்ச்சல் காரணமாக மந்திகை வைத்தியசாலையில் 7 ஆம் இலக்க விடுதியில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்ட நபருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர் பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்தவர் கடந்த மூன்று நாள்களுக்கு முன் மருதனார்மடத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தகத்துக்கு சென்றிருந்ததாகவும் அங்கு குடிதண்ணீர் குடித்ததாக அவர் சுகாதாரத் துறையினருக்கு தெரிவித்துள்ளார்.
அவரது குடும்ப உறுப்பினர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.