புலவர் அரியநாயமக் அவர்களது இறுதி யாத்திரை நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன.
நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முன்னாள் பிரதி அதிபர் கோட்டக்கல்விப்பணிப்பாளர், பிரதேச சபைத் தலைவர் நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுசங்கத் தலைவர் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிய புலவர் அரியநாயகம் அவர்களது பூதவுடல் மக்களது கண்ணீருடன் நெடுந்தீவு கிழக்கு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நெடுந்தீவின் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி பணிகளில் தன்னை அர்ப்பணித்து பணியாற்றியதுடன் சிறந்த பேச்சாற்றலும் தமிழ்ப் பற்றும் கொண்ட புலவர் அவர்கள் வயது மூப்பின் காரணமாக அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 12) இயற்கை எய்தினார்.
அவரது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று காலை யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்ககொடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டது
நெடுந்தீவில் இறங்கு துறைமுகத்தில் இருந்த தேவா கலாச்சார மண்டபம் வரை அவரது பூதவூடல் பிரதான வீதியூடாக கொண்டு செல்லப்பட்டு தேவா கலாச்சார மண்டபத்தில் இறுதி அஞ்சலிக்கூட்டம் இடம் பெற்றது. பல நூறு மக்கள் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்த கொண்டதுடன், பலர் அவரது செயற்பாடுகள் தொடர்பாக இரங்கலுரை ஆற்றினார்கள்
தொடர்ந்து புனித சவேரியார் ஆலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மாலை 04.00 மணிக்கு நெடுந்தீவு கிழக்கு சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.