புலவவர் அமரர் A W அரியநாயகம் அவர்களின் பூதவுடல் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்றையதினம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளர் புலவர் என்று அழைக்கப்படும் A W அரியநாயகம் நேற்றுமுன்திம் காலமானார்.
வயது மூப்பின் காரணமாக சில காலங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் காலமான அன்னாரின் பூதவுடல் யாழ்ப்பாணத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் புனித மரியன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் அவரது பூர்வீக இடமான நெடுந்தீவுக்கு கடல்வழியாக இன்று காலை கொண்டுசெல்லப்பட்டது.
நெடுந்தீவின் தேவா கலாசார மண்டபத்தில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட யாழ் மாவட்டத்தின் முக்கியஸ்தர்கள் அன்னாரின்’ பூதவுடலுக்கு மலர்வளையும் சாத்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்களின் அஞ்சலி மரியாதையை தொடர்ந்து அஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றது.
இதையடுத்து அன்னாரின் பூதவுடலுக்கு நெடுந்தீவு புனித சவோரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்பக்கொடுக்கப்பட்டநிலையில் பெருந்திரளனா மக்களின் கண்ணிருடன் நெடுந்தீவு கிழக்கு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக அமரர் A W அரியநாயகம் அவர்கள் 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நெடுந்தீவு பகுதி இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் தொடர்பற்றிருந்த நிலையில் மக்கள் படும் வேதனையை போக்குவதற்காக சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நெடுந்தீவு பகுதிக்கு அழைப்பதில் பெரும்பங்காற்றியிருந்தார்.
அமரர் அரியநாயகம் அவர்கள் தனது வாழ்நாளில் நெடுந்தீவு மகாவித்தியால அதிபராகவும் , கேட்ட கல்வி அதிகாரியாகவும், பலநோ கூ .ச தலைவரராகவும், ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் பிரதிநிதியாக நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவராகவும் இருந்து செயற்பட்டு நெடுந்தீவு மக்களையும் அப்பிரதேசத்தின் வளங்களையும் பாதுகாத்து தனது ஆற்றலையும் ஆழுமையையும் காண்பித்திருந்ததுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மிக நெருங்கிய நட்புக்குரியவருமாவார்.
அதுமட்டுமல்லாது தமிழ்த் தரப்பில் இருக்கும் பல்வேறு அரசியல் தலைமைகளுள் தமிழ் மக்களை குறிப்பாக நெடுந்தீவு மக்களின் நலன்களை ஆற்றுப்படுத்தும் தலைமையாக டக்ளஸ் தேவானந்தாவே இருப்பார் என 1991 களிலேயே இனங்கண்டு அவரது பாதையில் பயணித்து நெடுந்தீவு மக்களின் கண்ணீருக்கும் அப்பிரதேசத்தின் மீள் எழுச்சிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து பணியாற்றிய சிறந்த சமூக சேவையாளராக மிளிர்ந்திருந்தார்.
அந்தவகையில் அமரர் அரியநாயகம் என்னும் நெடுந்தீவின் இமயம் சரிந்தாலும் அவரது எண்ணமெங்கு நிறைந்திருந்த நெடுந்தீவை தொடர்ந்தும் சிறப்பாக வழிடத்திச் சென்று அவரது கனவுகளை நனவாக்க வேண்டியதே இன்றுள்ள எமது அனைவரதும் பொறுப்பாகும்.
இதனிடையே ஈழமக்கள் ஜனநாய கட்சியின் சர்வதேச பிராந்தியங்களின் சார்பிலும் அமரர் அரியநாயகத்திற்கு அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி செய்திகளும் வெளியிடப்பட்டிருந்தன.
குறிப்பாக
நித்திலக்கடல் மீது நீண்டு படுத்திருக்கும் நெடுந்தீவில்,…..
அறம் வெல்ல எழுந்தாடிய பேரலை ஒன்று ஓய்ந்தது!…
ஒரு சூரியனே வந்திறங்கி நிலமாடி துயர் சூழ் இருளதனை வென்றாட,…
நீட்டோலை எழுதி பள்ளி எழுச்சி பாடிய பாவலன் குரல் ஓய்ந்தது!….
இன்னமும்,… அலைகள் அடிக்கும் அந்த ஓசையில்,….
சங்கத்தமிழ் எடுத்து உரைக்கும் அந்த சிம்மத்தொனி ஒலிக்கும்!…
அது நெடுந்தீவு அன்னையின் காதோரம் விழும்!…
நினைவுகளை அள்ளிப்பருகும் நிலமெல்லாம் அழும்!!..
புலவர் அரியநாயகம் அவர்களுக்கு அஞ்சலி மரியாதை!…
என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சுவிஸ் பிராந்தியம் அமரருக்கான தமது அஞ்சலி குறிப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஜேர்மன் பிராந்தியம் தனது அஞ்சலி குறிப்பில்