தென்மேற்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள புரெவி சூறாவளியானது திருகோணமலைக்கு கிழக்காக 110 கிலோமீற்றர் கடல்மைல் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முல்லைத்தீவிற்கு தெற்கே 35 கிலோமீற்றர் தெற்கில் புயல் நிலப்பகுதிக்குள் நகர்வதாக யாழ் பல்கலைகழக புவியியல் துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் உருவாகிய புரேவி புயலின் வெளிவலய எல்லை இன்று புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் முல்லைத்தீவு நகருக்கு தெற்கே 35 கி.மீ. தூரத்தில் நிலப்பகுதிக்குள் நகர்ந்துள்ளது.
எனவே கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கும் நிலையில் கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.