புயல் எச்சரிக்கை கொடிகம்பம் திறந்து வைக்கப்பட்டது.
நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாச அலுவலகத்தில் புயல் எச்சரிக்கை கொடியேற்றும் நிகழ்வு இன்றைய தினம் சம்பிரதய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடல்கொந்தளிப்பு, புயல் போன்ற அனர்த்த பாதுகாப்பு குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறுகின்ற போது அதனை முன்கூட்டியே கடற்தொழிலாளர்களுக்கும் ஏனைய மக்களுக்கும் தெரியப்படுத்தும் ஓர் அனர்த்த முன்னயத்த நடவடிக்கையாக எதிர்காலங்களில் இக் கொடி சமாச கட்டிடத்தில் ஏற்றப்படும்.
எனவே இவ் புயல் எச்சரிக்கை கொடியேற்றுவதற்காக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் (ஜீலை 19) நடைபெற்ற வைப ஆரம்ப நிகழ்வு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் திரு.பா.லீலியான் குருஸ் அவர்களது தலமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் நெடுந்தீவு பொறுப்பாளர் தோழர் முரளி அவர்களும் பொதுஜன பெரமுன கட்சியின் நெடுந்தீவு அமைப்பாளர் திரு.பற்றிக் றொஷான் அவர்களும் இணைந்து திறந்து வைத்தனர் முதலாவது சம்பிராதாய கொடியினை நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் திரு.சசிகுமார் அவர்கள் ஏற்றி வைத்தார்.
இவ் அனர்த்த முன்னயாத்த செயற்பாட்டிற்கான கொடிக்கம்பம் அமைப்பதற்கான பூரண நிதியுதவியினை நெடுந்தீவினை சேர்ந்த தற்போது லண்டனில் வசிக்கும் திரு.யோன்சன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.