நெடுந்தீவு பிரதேச செயலககத்தின் கணக்காரளராக இரண்டு வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி தற்போது யாழ் மாவட்ட செயலகத்திற்கு மாற்றலாகி செல்லும் மதிப்பிற்குரிய கணக்காளர் திரு.வல்லிபுரம் சுபாசன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு நேற்று முன்தினம் (ஒக்டோபர் 04) இடம் பெற்றது.
ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச செலயாளர் தலமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் புதிய கணக்காளர் திரு.நாகேந்திரம் பாலா, உதவி பிரதேச செயலாளர் திரு.ரீ.கென்ஸ்மன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இரண்டு வருடங்கள் சேவையாற்றிய மதிப்பிற்குரிய கணக்காளர் அவர்கள் பல இன்னல்கள் மத்தியிலும் குறிப்பாக கொரேனா தொற்று பரவல் நேரத்திலும் மிக நேர்த்தியாக தன்னுடைய கடமைகளை மேற்கொண்டதுடன் பல சமூகப் பணிகளையும் முன்னின்று செயற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
பிரசே செயலக உத்தியோகத்தர்களிடம் மட்டுமன்ற சமுக அமைப்புக்கள், நெடுந்தீவு மக்கள் அனைவருடனும் இணைந்து பல்வேறு சமூக அபிவிருத்தி பணிகளில் தன்னை ஈடுபடுத்தி விடுமுறை நாட்களிலும் எமது ஊரின் வளர்ச்சிக்காக இணைந்து செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக எமது நண்பர்கள் வட்டத்தின் கணக்கு ஆலோசகராக செயற்பட்டு எமது கணக்குகளை மேற்பார்வை செய்து வழங்கியதுடன் சிறந்த ஆலோசகராகவும் செயற்பட்டு வந்தார். மாற்றலாகி செல்லும் மதிப்பிற்குரிய கணக்காளர் அவர்களுக்கு நெடுந்தீவு மக்கள் சார்பபாக வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றோம்.