பிரதமர் ஹரினி அமரசூரியவின் யாழ்ப்பாண வருகையின் போது இன்று (பெப். 15)காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர்மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்தமாணவர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்ததுடன் கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டிருந்தார்.
இதேவேளை அதிபர், ஆசிரியர்களையும் சந்தித்ததுடன் கல்லூரி மண்டபத்தில் பிரதமர் உரையாற்றியதுடன் , அதிபரால் நினைவுப்பரிசொன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், றஜீவன்ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர்.