வவுனியா, பாவற்குளத்தில் நீராடச் சென்ற 4 வயதுச் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
வவுனியா, சூடுவெந்தபுலவைச் சேர்ந்த அம்ஜத் என்ற சிறுவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான் என்று உளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. தாயுடன் நீராடச் சென்றபோதே இந்த அனர்த்தம் நடந்துள்ளது. சிறுவனை நீராடவிட்டு தாய் கரைக்குத் திரும்பிய நிலையில் சிறுவன் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளான் என்று கூறப்படுகின்றது.
தாய் அந்தப் பகுதியில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்ததை அடுத்து, சிறுவனைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சிறிது நேரத்தில் சிறுவன் மீட்கப்பட்டு, வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை உளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.