பாரி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மலையகச் சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பாரி சுயகற்றல் ஏடுகள் நேற்று (ஏப்ரல் 6) வழங்கப்பட்டன.
கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 6 பாடசாலைகளைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கு இவை வழங்கப்பட்டன.
கண்டி இந்து தேசிய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் 3 லட்சத்து 11 ஆயிரம் ரூபா பெறுமதியான பாரி சுயகற்றல் ஏடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கண்டி இந்து தேசிய கல்லூரி அதிபர் சி.சந்திரமோகன், ஏனைய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.