பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று சனிக்கிழமை வெளியான முடிவுகளின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் 5 பேருக்கும், பருத்தித்துறை நீதிமன்றத்தில் பணிபுரியும் ஒருவருக்கும் மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அறிகுறிகளுடன் வருகை தந்த ஒருவருக்கும் என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.