தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஆடிப்பிறப்பு விழா ஆடிப்பிறப்புத் தினமானநேற்று வியாழக்கிழமை (ஜூலை) 17) நாவற்குழி முத்தமிழ் சனசமூக நிலையமுன்றலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் மக்களின் காலக்கணிப்பீட்டையும் அவர்தம் பகிர்ந்துண்ணும் உணவுப்பண்பாட்டையும் எடுத்தியம்பும் பண்பாட்டுப் பண்டிகைகளாகத் தைப்பொங்கலும்ஆடிப்பிறப்பும் அமைகின்றன.
சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை தொடக்கம் ஆனி வரையுள்ள ஆறுமாதகாலம் உத்தராயண காலம் எனவும், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆடிமுதல் மார்கழி வரையிலான காலம் தட்சணாயண காலம் எனவும்அழைக்கப்படுகின்றன.
இவற்றில் உத்தராயண காலத் தொடக்க நாள் தைப்பொங்கல் எனவும்தட்சணாயண தொடக்க நாள் ஆடிப்பிறப்பு எனவும் தமிழ் மக்களால்கொண்டாடப்படுகிறது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தமிழ்ப் பண்பாட்டைப் பறைசாற்றும் இவ்விருதினங்களையும் கிராமங்களில் அவ்வூர் மக்களுடன் இணைந்து ஆண்டுதோறும்கொண்டாடி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆடிப்பிறப்பைநாவற்குழியில் முத்தமிழ் கிராம மக்களுடன் கூழும் கொழுக்கட்டையும் ஆக்கிக் கொண்டாடியது.
இவ்விழாவில் நானும், இயக்கத்தின் கலை, இலக்கிய அணியின் துணைச்செயலாளர் கை. சரவணன் அவர்களும் பங்கேற்றிருந்தோம்.