“மீண்டும் ஊருக்குப் போகலாம்” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு ஊரும்உறவும் நிறுவனத்தால் உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவு உறவுகளைஒன்றிணைத்து 04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை நடாத்த இருக்கும்“நெடுவூர்த் திருவிழா” தொடர்பான கலந்துரையாடல் கடந்த வாரம் மட்டக்களப்புபளுகாமத்தில் வாழும் “நெடுந்தீவார்” என அழைக்கப்படும் உறவுகளுடன்இடம்பெற்றுள்ளது.
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தகலந்துரையாடலில் நெடுந்தீவின் வழித்தோன்றல்களது உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். இச்சந்திப்பில் எதிர்வரும் ஆவணி மாதம் இடம்பெறவிருக்கும்நெடுவூர்த் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாகவும் குறித்த திருவிழாவை சிறப்பாகநடாத்தி முடிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் இதன்போது மட்டக்களப்பு பளுகாமத்தில் இருந்து கலந்து கொள்வோம் எனஉறுதியளித்துள்ளதுடன் தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்க விரும்புவதாகவும் சந்திப்பின்போது தெரிவத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.