நெடுந்தீவு மாவிலி துறைமுக பகுதிக்கான நுழைவாயிலின் கிழக்கு பகுதி நிலையான கொங்கிறீற் இடப்பட்டு கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த காலத்தில் துறைமுக ஆழமாக்கல் வேலைத்திட்டத்தின் போது கடற்பகுதியில் இருந்து அகற்றப்பட்ட கற்கள் மற்றும் மண் என்பவற்றின் ஒரு பகுதி துறைமுக கிழக்குப் பகுதியிலேயே கொட்டப்பட்டது. இவ்வாறு கொட்டப்பட்டவை தற்போதும் இதற்கு முன்பும் ஏற்பட்பட்ட கடுமையான கடல்அலையின் தாக்கத்தினால் மீளவும் ஆழமாக்கப்பட்ட பகுதிக்கு அடித்து செல்லும் நிலை காணப்படுகின்றது.
குறுகிய காலத்தில் இவ்வாறு மீள கடற்பகுதிக்குள் தள்ளப்படும் கல், மண் என்பவற்றால் துறைமுகத்தினுள் நுழையும் பகுதியில் தடைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது.
எனவே துறைமுகத்தின் கிழக்குப்பகுதியினை நிலையான அணை அமைத்து மக்களின் எதிர்கால சீரான போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலர் தெரிவிதரதுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.