நெடுந்தீவு பிரதேச செயலக அலுவலர்களின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டிற்கானஒளிவிழா நிகழ்வானது செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம்(டிசம்பர் 17) சிறப்பாக நடைபெற்றது .
நத்தார் தீப ஒளியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்திரு ப.பத்திநாதன் அடிகளார் கலந்து கொண்டு திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவ மாணவிகள் மற்றும் அலுவலர்களின் கலைநிகழ்வுகளும், பரிசில் வழங்கலும் இடம்பெற்றது.