நெடுந்தீவு பிரதேசத்தின் தெரிவு செய்யப்பட்ட 03 இடங்களில் தவறணை அமைப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள் இன்று (ஆகஸ்ட் 12) நெடுந்தீவு பிரதேச செயலரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட முறைமையின் ஊடாக மட்டும் கள் விற்பனை நடைபெறுவதை உறுதிசெய்வதுடன் பனை உற்பத்தியினை ஊக்குவித்தலையும் மற்றும் நிரந்தர வருமானத்தை நோக்காககொண்டும் மூன்று தவறணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி நெடுந்தீவு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் நெழுவினி பகுதியிலும்
நெடுந்தீவு மத்தி கிராம அலுவலர் பிரிவில் பண்டாரம்பிட்டி பகுதியிலும்
நெடுந்தீவு கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் பெருக்கடி ஆகிய பகுதிகளில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தால் அனுமதிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் நிறுவப்பட்டு செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.