நெடுந்தீவு திருலிங்கபுரம் கடற்தொழில் துறைப் பகுதி சீரின்மையால் சேதமடைந்த மீன்பிடிப் படகுகளை திருத்தம் செய்வதற்காக கடற்தொழில் அமைச்சர் தமது கட்சி நிதியில் உதவி செய்துள்ளார்.
திருலிங்கபுரம் வளர்பிறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் 12 பேரின் மீன்பிடிப்படகுகளின் திருத்தவேலைக்காகவே சுமார் 450,000 ரூபாஇவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை நெடுந்தீவு வளர்பிறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினால்குறித்த பகுதியில் நேற்றையதினம் (ஜூன்11) ஏற்பாடு செய்யப்பட்ட மீன்பிடிபடகுகள் திருத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின்நெடுந்தீவு அமைப்பாளர் எஸ்.முரளி அவர்கள் திருத்தப் பணியினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறித்த பகுதியில் குடியேற்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் குடியேற்றப்பட்டுள்ள நிலையிலும் அவர்களது படகுகளை பாதுகாப்பாக கடலுக்கு கொண்டுசென்று வரக்கூடிய கட்டமைக்கப்பட்ட துறைமுக அமைப்பு இன்மையால் இப் பகுதி தொழிலாளர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.