நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(ஜூலை 14) யாழ் மாவட்ட மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் நெடுந்தீவில் இடம்பெறவேண்டிய அபிவிருத்திப் பணிகள் மற்றும் நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.
இந்த நிலையில் இக்கூட்டத்தில் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் இயங்குகின்ற அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் திணைக்கள தலைவர்கள், அதன் தலைமையக அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நெடுந்தீவு கடல் போக்குவரத்து தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெடுந்திவிலிருந்து காலை 6:30 மணிக்கு படகு புறப்பட்டு மீண்டும் குறிகட்டுவான் துறைமுகத்திலிருந்து 7:30 மணிக்கு நெடுந்தீவை நோக்கி புறப்படுவதற்கு ஏற்ற வகையில் ஒழுங்குகள் செய்து படகு சேவை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் குமுதினி படகு திருத்த வேலைகளிடம் பெற்று முடிவடைந்துள்ளதால் அதனை இச்சேவையில் ஈடுபடுத்த முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குமுதினிப் படகு சேவையில் ஈடுபடாத போது நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்க படகினை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் எரிபொருள் வழங்கி அச் சேவையில் முறிவு ஏற்படாத வகையில் செயல்படுத்துவதற்காகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் நெடுந்தீவு பிரதேச சபை கட்டுப்பாட்டில் உள்ள மாட்டு இறைச்சி கடை தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக தெரிவிக்க தெரிய வருகின்றது.
இந்த நிலையில் இதுவரை காலமும் அங்குள்ள கொல்களத்தில் இறைச்சிக்காக வெட்டப்படுகின்ற மாடுகளின் வயதுகளை மதிப்பீடு செய்வது பொது சுகாதார பரிசோதகரே மேற்கொண்டு வந்ததாகவும் இந்த நடவடிக்கை தவறானது எனவும் இதனை அதற்குரிய நெடுந்தீவு லபிரதேசத்துக்கான கால்நடை வைத்திய அதிகாரி அதனை பரிசோதித்த பின்னர் மாடுகள் வெட்டுவதற்காக சுகாதார முறைப்படி வெட்டப்படும் அனுமதியையும் , சுகாதார பரிசோதகர் கவனிக்க வேண்டும் என்பதுடன் கொள்கலத்தில் வெட்டப்படுகின்ற மாடுகள் மாத்திரமே கடைக்கு கொண்டுவரப்படுகின்றது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அடுத்ததாக கடற்தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனைகள் முன்னெடுக்கப்பட்டு அதிலே காரசாரமான வாக்குவாதங்கள் , விவாதங்களும் இடம்பெற்றதாகவும் தெரிய வருகின்றது.
மேலும் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்படுகின்ற நிலைமை காணப்படுகின்ற மையையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல நெடுந்தீவு பிரதேசத்திற்கு எடுத்து வரப்படுகின்ற எரிபொருள் விநியோகத்தின் போது அதிகமான விலைக்கு விற்கப்படுவதாகவும் பிரசாவிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் தொடர்பு கொண்டு போக்குவரத்துச் செலவினை ஈடுசெய்கின்ற வகையில் அந்த எரிபொருளை விநியோகிக்கின்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்கான ஆக்கபூர்வமான பணியை முன்னெடுக்கவுள்ளதாக தெரிய வருகின்றது.
அத்துடன் பல காலமாக ஆராயப்படுகின்ற விடயமாக கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்குரிய நேரம் போதாமையால் இது தொடர்பாக பெரிதும் ஆராயப்படவுல்லை என்பதுடன் கல்வியில் வளர்ச்சி பின் தங்கிய நிலைக்கு சென்று கொண்டிருக்கின்ற நிலைமை காணப்படுவதனால் அதனையும் அதனுடைய காரணங்களையும் கண்டறிந்து சீர் செய்யப்பட வேண்டும் என்பதுடன் சுகாதார துறையும் சீரான ஒரு சேவையினை வழங்க வேண்டும் என்று எண்ணத்துடன், இவை தொடர்பாக ஆராய பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தமையும் காணக் கூடியதாக இருந்ததுடன் இது தொடர்பாக ஆராயப்படாமையினால் பெரும் மன வருத்தத்துக்கு உண்டானதாக தெரியருகின்றது. இது விடயமாக கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.