நேற்று நள்ளிரவு (ஏப்ரல் 21) நெடுந்தீவில் நடந்த அசம்பாவிதம் காரணமாக நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்கு பயணம் செய்யவுள்ளனரென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நெடுந்தீவுப் பகுதியில் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரியவருகின்றது.
காத்திகேசு நாகசுந்தரி,சுப்ரமணியம் மகாதேவன்,பாலசிங்கம் பூமணி, திருமதி நாகரட்ணம், திரு.க.பாலசிங்கம் ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
100 வயதுடைய கனகரட்ணம் பூரணம் என்பவரே காயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.