நெடுந்தீவு கடற்பரப்பில் 93 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 4) கைதுசெய்யப்பட்டனர்.
நெடுந்தீவின் மேற்கு கடற்பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 03 சந்தேகநபர்கள் மற்றும் 283 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சா ஏற்றப்பட்ட டிங்கி படகு ஒன்று கைதுசெய்யப்பட்டது.
நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில், கடலோரக் காவல்படையுடன் இணைந்து கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடல் பகுதிகளில் வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி நெடுந்தீவுக்கு அப்பால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையில் வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடலோரக் காவல்படையின் CG 402 ரோந்துக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டது.
இதனையடுத்து, சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று கடற்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், டிங்கி படகில் இருந்து 06 கேரள கஞ்சா மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சாக்குகளில் சுமார் 283 கிலோ மற்றும் 700 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள 76 போதைப்பொருள் பார்சல்கள் இருந்தன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் பேசாலை பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். சந்தேகநபர்கள் மற்றும் கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.