நெடுந்தீவு மத்தி பெருக்கடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வன் தொண்டன் கல்வி நிலைய முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்றையதினம் (நவம்பர் 26) சிறப்பாக இடம்பெற்றது.
கல்வி நிலைய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற நிகழ்வில் நினைவுப் பொங்கல் இடம்பெற்றதுடன், மாணவர்களது கலை நிகழ்வுகளும், ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசில் வழல்கலும் இடம்பெற்றது.
கடந்த வருடம் இதே தினத்தில் சிறப்பான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிலையத்தில் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வகுப்பு மற்றும் ஆங்கில பாட வகுப்பு, தரம் 10,11 மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம், வரலாறு ஆகிய பாட வகுப்புகளும் உயர்தர மாணவர்களுக்கு தமிழ், வரலாறு, அரசியல், கிறிஸத்தவ நாகரிகம் ஆகிய பாட வகுப்புகளும் இடையறாது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நெடுந்தீவில் உள்ள சகல பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கியே இலவச கல்விப்பணி இடம்பெற்று வருவதுடன் மாணவர்களை இக் கல்வி நிலையத்தில் சேர்ந்து பயனடையும் வகையில், பாடசாலை சமூகத்தினர் மற்றும் பெற்றோர் ஒத்துழைக்க வேண்டுமென , முதலாம் ஆண்டு நிறைவில் நிர்வாகத்தினர் வேண்டிநிற்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
ஆரம்ப நிகழ்வில்…..