நெடுந்தீவு பகுதியில் அனுமதியின்றி மாட்டிறைச்சியினை வழங்கிய இருவர் அதனை விற்பனை செய்த ஒருவர் என மூன்று போர் நேற்றைய தினம் (ஜூன்12) இரவு இளைஞர்கள் நெடுந்தீவு பொலிசாருடன் இணைந்து இறைச்சி விற்பனை ஆகும் இடத்தில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்.
இந்நடவடிக்கையின் பினரனர் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் அதிகளவானமாட்டு உரிமையாளர்கள் கூடிய உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொலிசாரிடம் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை இறைச்சியும் இன்றையதினம் (ஜூன்13) காலை நெடுந்தீவு பொலிசாரால் சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஒப்படைக்கும் வகையில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிசார் தெரிவித்தனர்.
இப்பகுதியில் தொடர்ச்சியாக பசு மாடுகள் கன்றுகள் அதிகளவாக களவாடப்பட்டு இறைச்சி ஆக்கப்பட்டு விற்கப்படுவதும், வெளியே ஏற்றப்படுவதும் தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் இதனால் உரிமையாளர்கள் பெரும் அவலங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.