நெடுந்தீவு, 11ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசேந்திரம் என்பவர் இன்று (ஏப்ரல் 21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தில் குடியிருப்புக்கள் அற்ற பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 3 தினங்களாக இவர் காணாமல் போயிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இறப்பு விசாரணைகளின் பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.