இறந்தவர்களை நினைவுகூரும் திருநாள் இன்று( நவம்பர் 2 ) கத்தோலிக்க மக்களால் நெடுந்தீவில் நினைவுகூரப்படவுள்ளது.
மரித்த விசுவாசிகளுக்கான திருப்பலிகள் நெடுந்தீவு பங்குத்தந்தையினால் நெடுந்தீவில் உள்ள 03 சேமக்காலைகளில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில் காலை 06:00 மணிக்கு நெடுந்தீவு கிழக்கு கட்டுறாமன்சல்லி சேமக்காலையிலும், காலை 08:00 மணிக்கு நெடுந்தீவு மேற்கு புனித லோறன்சியார் ஆலய சேமக்காலையிலும், மாலை 04:30 மணிக்கு நெடுந்தீவு மத்தி சேமக்காலையிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.