கடந்த வாரம் நெடுந்தீவில் இருந்து காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதற்கு அமைவாக அவருடன் தொடர்புடைய அவர் குடியிருக்கும் பிரதேசத்தில் அண்மையில் இருப்போhர் மற்றும் ஏனைய இடங்களில் வசிப்போர் தனிமைப்படுத்தப்பட்டோர் என நேற்றைய தினம் (ஜீலை 26) 126 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மூன்று அன்டியன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது அதில் இரண்டு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவரது மனைவியும் மகளுமாவார்.
மேலும் நேற்றைய தினம் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 126 பேரில் 14 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை விட இன்றைய தினமும் 42 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே கொரோனா பாதுகாப்பு செயற்பாடுகளை மக்கள் கடைப்பிடித்து நெடுந்தீவினை கொரோனா தொற்றுதியில் இருந்து பாதுகாக்க அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான சரியான பாதுகாப்புடன் அவர்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதும் அவசியமாகும் நேற்றைய தினம் அடையாளப்படுத்தப்பட்ட இரண்டு நோயளர்களும் இன்றைய தினம் சிகிச்சைக்காக வீதியில் கால்நடையாக அழைத்து செல்லப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது. அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களும் தங்களை சுயதனிமைப்படுத்தி வைரஸ் தொற்றுப்பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்