அரசமைப்பு பேரவை முதன்முறையாக நாளை (ஜனவரி 24) கூடவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்குதல் போன்ற பல தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவே அரசமைப்புப் பேரவை கூடுகின்றது.
நாளை காலை 9.30 மணிக்கு பேரவை கூடவுள்ளது என்று நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்தது.
கலாநிதி பிரதாப் ராமானுஜன், கலாநிதி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி தினேஷ் சமரரத்ன ஆகியோர் அரசமைப்பு பேரவையின் மூன்று சிவில் பிரதிநிதிகளாக கடந்த வாரம் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசமைப்பு சபைக்கு இதுவரை நியமிக்கப்படவில்லை.
ஆயினும் அது அரசமைப்பு பேரவை கூட்டத்துக்கு இடையூறை ஏற்படுத்தாது என நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.