நெடுந்தீவு இலங்கை வங்கி கிளை நாளைய தினம் தனது சேவையினை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தனது சேவை வழங்கப்பட்டது. தற்போதைய கொவிட் தொற்றுக் காரணமாக மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுதவதால், வங்கித்தேவை என்பது நெடுந்தீவு மக்களுக்கு முக்கிய ஒன்றாக காணப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை கிளை திறக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கால சூழ் நிலைகளைக் கருத்திற் கொண்டு அடுத்தவாரம் சேவைகள் இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் தன்னியக்க இயந்திரம் (ATM) மிக முக்கிய ஒன்றாக காணப்படுகின்றது மக்கள் பணம் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் காணப்படுமானால், மக்கள் சிரமங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் நீண்ட நேரம் காத்திருந்து பணம் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலமை தற்போது காணப்படுகின்றது.
அத்துடன் வங்கிகள் திறக்கப்படாத சந்தர்ப்பங்களில் பணம் பெற்றுக் கொள்வது மிகவும் கடினமானதாக காணப்படுகின்றது அரச உத்தியோகத்தர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள்.
இது தொடர்பாக அண்மையில் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட கௌரவ இராஜங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்ற போது அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் இது விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மிக விரைவாக மேற்கொள்வது நன்று