நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் எதிர்கால தொழிலாளர் துறைகள் பெரும் தாக்கத்திற்குள்ளாகுமென பேராதனை பல்கலைக்கழக பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் நாட்டின் பிறப்புகள் 247,900 ஆகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிறப்பு விகிதம் குறைவதன் பின்னணியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன எனவும், இதனால் எதிர்காலத்தில் பாடசாலைகளில் மாணவர் சேர்க்கைகள் குறையக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தொழில்துறைகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் அபாயமும் நிலவுகிறது.
இதனிடையே, நாட்டில் முதியோர் மக்கள் தொகை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் சுகாதார சேவைகளின் தேவையும் செலவுகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இத்துடன், நாட்டில் இறப்பு விகிதம் உயர்ந்துவருவதாகவும் பேராசிரியர் வசந்த அதுகோரல மேலும் குறிப்பிட்டுள்ளார்.