2020ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் யாழ் கிளிநொச்சி மாவட்டங்ககளில் போட்டியிடும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இன்று (ஜீலை 23) வியாழக்கிழமை நல்லை ஆதின குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரம்மச்சாரிய சுவாமியை இன்று வியாழக்கிழமை நல்லை ஆதினத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
கூட்டமைப்பின் வேட்பாளர்களான தலமை வேட்பாளர் மாவை சேனாதிராசா, எம்.ஏ சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், ஈ.சரவணபவன், திருமதி சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனல்ட், தபேந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் சந்தித்துள்ளனர்.
தற்கால நிலமைகள் தேர்தல் தொhட்பாகவும் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் தேர்தல் விஞ்ஞாபனமும் கையளித்துள்ளனர்
இச்சந்திப்பில் கூட்டமைப்பு சார்பாக சந்தித்துக் கொண்டாலும் சந்தித்துக் கொண்ட அனைத்து வேட்பாளர்களும் தமிழரசுக்கட்சியினை சார்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.