நல்லூா் பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் (ஜனவாி 15) 13 போின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இன்றைய தினம் நல்லூா் பிரதேச சபையின் தவிசாளா் திரு.மயுரன் அவா்களினால் பாதீடு முன்வைக்கப்பட்டது.20 உறுப்பினா்கள் கொண்ட நல்லூா் பிரதேச சபையில் 13 உறுப்பினா்கள் ஆதரவாக வாக்களித்தனா்.
இவ்வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக இரண்டு உறுப்பினா்கள் வாக்களிக்க மூன்று உறுப்பினா்கள் நடுநிலமை வகித்தனா். முன்னாள் தவிசாளா் உட்பட இரண்டு உறுப்பினா்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக்கட்சி உறுப்பினா்கள் எதிா்த்து வாக்களி்க்க ரெலோ கட்சி உறுப்பினா்கள் ஆதரவாக வாக்களித்தனா்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினா்கள் ஆதரவாகவும் இரண்டு உறுப்பினா்கள் எதிராகவும் வாக்களித்தனா். ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, சுயேட்சைக்குழு தமிழா் விடுதலைக்கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக்கடசி எனபன ஆதரவாக வாக்களித்தனா்