யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நுணசை சிவன்கோவிலில் நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் அடங்கிய கும்பல் அங்கு நகைத் திருட்டை மேற்கொண்டுள்ளது.
அண்மையில் ஆலயங்களில் இடம்பெற்ற பல்வேறுபட்ட நகை திருட்டுகளுடன் கும்பலுக்கு தொடர்புள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை பவுண் நகை திருடப்பட்டுள்ளன.
விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் ஒரு 43 வயதுடைய பெண் மற்றும் ஒரு 26 வயதுடைய ஆண் ஆகியோரை கைது செய்துள்ளது. ஒரு பெண் தலைமறைவாகியுள்ளார்.
திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.