தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் இடம்பெறவுள்ள தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்தக் கற்கைநெறி தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் யாழ்.மாவட்ட அலுவலகம் மற்றும் மானிப்பாய் பயிற்சி நிலை யங்களில் இடம்பெறும்.
கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் 16 தொடக்கம் 25 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஏதேனும் 3 பாடங்களில் திறமைச் சித்தியும் கணிதம், ஆங் கிலம் உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தியும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 2 பாடங்களில் சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களை ‘மாவட்ட முகாமையாளர், தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, மாவட்ட அலுவலகம், இல.44, சோமசுந்தரம் அவனியு, சுண்டுக்குழி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பி வைக்கவேண்டும்.
மேலதிக விவரங்களை 0212222383,071 4553772 எனும் தொலைபேசி இலக்கங்களு டன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட முகாமையாளர் இ.திருமுருகன் அறிவித்துள்ளார்.