IOM நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்திய மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வு கடந்த 19 ஆம் திகதி காலை 8.30 தொடக்கம் மதியம் 1.00 மணி வரை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தொழில்துறை வெற்றிடங்களுக்கான ஆட்சேர்த்தலை மேற்கொள்வதற்காக தனியாா் உற்பத்தி நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் துறை ஹோட்டல் துறை ,கணக்கியல் துறை, காப்புறுதி துறை ,ஆடை உற்பத்தி துறை பாதுகாப்பு சேவை, தாதியர் வேலைவாய்ப்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களும் தொழிற்பயிற்சி பாடநெறிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கான கணினி துறை ,கப்பல் துறை ,தாதியர் பயிற்சி, ஹோட்டல் பயிற்சி நிறுவனங்களும் இதில் பங்கேற்றுக் கொண்டன .
இதில் 40 தொழில் வழங்குநர்களும் 15 தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் 423 தொழில் தேடுவோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் , மேலதிக மாவட்ட செயலாளர்(காணி), மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் , IOM நிறுவன பிரதிநிதி, , மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர்,மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள இணைப்பாளர், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் , மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழில் தேடும் இளைஞர்,யுவதிகள் ஆகியோா் கலந்து கொண்டனர்.