அதிபர்களின் தொலைபேசி இலக்கங்களை ஹக் செய்து தரவுகளை திருடி ஆசிரியர் மாணவர்களுடன் ஏனையவர்களுக்கும் தவறான படங்கள் செய்திகள் அனுப்பி அதிபர்கள் ஆசிரியர்களின்; புனித தன்மைக்கு களங்கம் விளைவிக்கின்றார்கள் என வடமாகண அதிபர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
யாழ்;பாண ஊடாக மையத்தில் நேற்து (ஜீலை 23) நடைபெற்ற ஊடாகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வடமாகாண அதிபர்கள் சங்க தலைவர் வே.த.ஜெயந்தன் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சூம் மற்றும் வைபர் செயலிகள் ஊடாகவே மாணவர்களது கல்வி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறன செயற்பாடுகிளில் ஈடுபடுகின்ற குழுக்களின் தொலைபேசி இலக்கங்கள் ஹைக் செய்யப்ட்டு அந்தக் குழுவுக்குள்ள இருக்கும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் தவறான செய்திகள் மற்றும் பொருத்தமற்ற படங்கள் அனுப்பி வைப்பது ஆசிரியத் தொழிலுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதுடன் அர்பணிப்புடன் இக்காலகட்டங்களில் தொழிநுட்பம் ஊடாக கல்வி நடாத்தி வருகின்ற ஆசிரியர்கள் மத்தியில் மன உளைச்சல் மற்றும் விரக்தி ஏற்பட காரணமாக உள்ளது
எமது வடமாகாண கல்வி நிலையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டிய தேவைப்பாடுகள் காணப்படுவதால் எதிர்காலங்களில் இவை தவிர்க்கப்பட வேண்டும் இது இவ்வாறு தொடருமாக இருந்தால் மாணவர்களது கல்வியே பெரிதும் பாதிப்படையும் எனவும் தெரிவித்தார்.