வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தமது கண்டனத்தை தெரிவிப்பதாக, அகில இலங்கை இந்து மாமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அகில இலங்கை இந்து மாமன்றம் அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.
சைவ ஆதாரங்களை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த நினைப்பதும், அதற்கான கண்டனங்களை வெளிநாடுகள் வரை கொண்டு செல்லும் போது தமது செயற்பாடுகளிலிருந்து தொல்லியல் திணைக்களம் தற்காலிகமாக பின்வாங்குவதும் கண்டிக்கத்தக்க விடயம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் சைவத் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது.
கீரிமலை கேணி, உயிர்நீத்தவர்களுக்காக, அவர்களது உறவினர்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்காக சைவமக்கள் வந்து செல்கின்ற இடம் எனவும் அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.