தென்மராட்சி மிருசுவில் பகுதியில் இன்று காணி சுவீகரிப்புக்காக நிலஅளவீடு செய்யப்படவிருந்த நிலையில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பிரதேச செயலாளர் குறித்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையிலும், குறித்த இடத்தில் இருந்த நில அளவைத் திணைக்கள அதிகாரி ஒருவர் படை முகாமிற்குள் பிரவேசித்ததால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.