நெடுந்தீவு கிழக்கு அருள்மிகு ஆலமாவன சித்தி விநாயாகா் தேவஸ்தான வருடாந்த ஆா்த்திரா தாிசன திருவெம்பாவை மகோற்சவ பெருவிழா இன்றைய தினம் (டிசம்பா் 21) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இத்திருவிழா 10நாட்கள் மிக சிறப்பாக இடம் பெறுவதற்காக சகல ஆயத்தங்களும் ஆலய நிா்வாக சபையினால் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்றைய முதலாவது நாள் நிகழ்வுகள மிகவும் சிறப்பாக இடம் பெற்றன.
ஆலய அா்ச்சகா் பிரம்மஸ்ரீ கா.புவனேந்திரசா்மாக அவா்களுடன் யாழ் நகாினை சோ்ந்த பிரபல குருக்கள், மங்கள இசைவாத்திய கலைஞா்கள், சுவாமி அலங்கார குழுவினா் இணைந்துள்ளதுடன் ஆலமாவனக் கலைக்குழுமத்தால் கிராமப் பிரவேச பஜனை பாடுதலும், ஆலயதத்த்தில் பத்து தினங்களும் திருவாசக முன்றோதலும், தினமும் திருவாதவுராா் புராண படலமும் இடம் பெறும்.
ஆலமாவன பிள்ளையாா் அன்னதான சபையினால் சுகாதார விதி முறைகளை பின்பற்றி காலை மதிய அன்னதானம் வழங்கும் செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது
பக்த அடியாா்கள் கொவிட் 19 பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வருகை தந்து வழிபாடுகளில் சமூக இடைவெளிகளைப் பின்பற்றி வழிபடுமாறு கேட்டு நிற்கின்றோம்.
கிரிஜா கால விபரம்.
- தினமும் கிரிஜா கால உற்சவங்கள் அதிகாலை 2.00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி அதிகாலை 2.15 மணிக்கு ஸ்நபன கும்ப பூஜையும் அபிஷேகமும்,
- அதிகாலை 4.30 மணிக்கு வசந்த மண்ட பூசையும்
- காலை 6.00 – 6.30 வரை திருவாசகப்பகுதி முற்றோதல். காலை 6.00 யாக பூசை
- காலை 6.30 திருவாதவூரர் புராண படனம் காலை 8.00 ஸ்தம்ப பூசை
- காலை 9.00 வசந்த மண்டப பூசையும் சுவாமி உள் வீதியுலாவும் (விநாயகப் பெருமான் , மணிவாசகர் , சண்டேஸ்வரர் உள் வீதியுலா திருவிழா எழுந்தருவார் ) காலை 11.00 பகல் திருவிழா நிறைவும். திருவாதவூரார் புராணபடன மீதியும் மாலைத்திருவிழா பிற்பகல் 3.00 மணிக்கு யாக பூசை மாலை 4.00 மணிக்கு ஸ்தம்ப் பூசை
- மாலை 5.00 மணிக்கு வசந்தமண்டபபூசையும் சுவாமி உள்வீதி , வெளி வீதி எழுந்தருளால்.
- 7.30 மணிக்கு திருவிழா நிறைவு.
- 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை கிராமசாந்தி,பிரவேசபலி,வாஸ்து சாந்தி 21-12-2020 திங்கட்கிழமை முதலாம் திருவெம்பாவை விழா ( கொடியேற்றம் முற்பகல் 9.30 மணிக்கு.( துவஜாரோகணம்)
- 22-12-2020 செவ்வாய் கிழமை இரண்டாம் திருவெம்பாவை திருவிழா
- 23-12.2020 புதன்கிழமை மூன்றாம் திருவெம்பாவை திருவிழா
- 24-12-2020 வியாழக்கிழமை நான்காம் திருவெம்பாவை திருவிழா
- 25-12-2020 வெள்ளிக்கிழமை ஐந்தாம் திருவெம்பாவை திருவிழா (108, சங்காபிஷேகம்.
- 26-12-2020 சனிக்கிழமை ஆறாம் திருவெம்பாவை திருவிழா.
- 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை ஏழாம் திருவெம்பாவை திருவிழா
- 28-12-2020 திங்கட்கிழமை எட்டாம் திருவெம்பாவை திருவிழா ( வேட்டைத்திருவிழா,பிற்பகல் 3,மணியளவில் சுவாமி வேட்டைக்கு புறப்படும்)
- 29-12-2020 செவ்வாய்க்கிழமை ஒன்பதாம் திருவெம்பாவை திருவிழா ( தேர்த்திருவிழா முற்பகல் 9,மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் )
- 30-12-2020 புதன்கிழமை பத்தாம் திருவெம்பாவை திருவிழா
- ( தீர்த்தத்திருவிழா காலை9,மணிக்கு தீர்த்தோற்சவம் )
- 31-12-2020 வியாழக்கிழமை பூங்காவனம்.
- 01-01-2021 வெள்ளிக்கிழமை வைரவர் உற்சவம்.