பொங்கல் பண்டிகையை வரவேற்கும் முகமாக வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகளுடன் மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று (ஜனவரி 8) திருகோணமலையில் இடம்பெற்றது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையில் பொங்கல் , 500 கோலங்கள், மற்றும் 1500 பரத நாட்டிய கலைஞர்கள் பங்குபற்றிய நாட்டியதிகழ்வு என்பவற்றைடன் குறித்த விழா சிறப்பாக இடம்பெற்றது.
இந்த விழாவின் பிரதம விருந்தினர்களாக நடிகர் பிரசாத், அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டதுடன் , நேற்றையதினம் படகோட்டப் போட்டியும் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பலரும் தமது வாழ்த்துகளை தெரிவித்து வருவதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.