நெடுந்தீவுக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 2021ம் ஆண்டு தரம் 01 இற்கு புதிதாக இணைந்து கொண்ட 65 மாணவா்களிற்கு அவா்களின் பெயாில் சமுா்த்தி வங்கியில் 1000.00 வைப்புச் செய்யப்பட்டு அவா்களுக்கான சேமிப்பு கணக்குகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மாணவா்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தினை உருவாக்கும் நோக்குடனும், அவா்களது எதிா்கால தேவைகளைக் கருத்திற் கொண்டும் இச் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச் செயற்றிட்டத்தினை நெடுந்தீவினை சாா்ந்து தற்போது லண்டனில் வசித்து வரும் திரு.யோகநாதன் ரமணன் அவா்கள் நண்பா்கள் வட்டத்தின் ஊடாக இச் செயற்பாட்டிறை்கான நிதியினை வழங்கியிருந்தாா்.
2020ம் ஆண்டு புதிதாக இணைந்து கொண்ட 48 மாணவா்களுக்கும், ரமணன் அவா்களு நிதியுதவியளித்து இத்திட்டத்தினை நண்பா்கள் வட்டத்தின் ஊடாக ஆரம்பித்திருந்தாா். அதன தொடா்ச்சியாக இவ்வருடமும் மேற்கொண்டிருந்தாா்.
இச் செயற்பாட்டினை சமுா்த்தி வங்கியின் ஊடாக ஆரம்பித்ததின் நோக்கம் வழங்கப்படும் பணம் எமது நெடுந்தீவின் ஏனைய தேவைகளுக்கு பயன்படும் எனும் நோக்கிலும் சமுா்ததி வங்கியுடாக வருடம் தோறும் போட்டி நிகழ்வுகள் பிரதேச மட்டம் தொடக்கம் தேசிய மட்டம் வரைக்கும் இடம் பெறுவது வழக்கம். சமுா்த்தி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பிள்ளைகள் மாத்திரமே இப்போட்டியில் பங்கு கொள்ள முடியும் என்பதால் இச் செயற்றிட்டம் சமுா்த்தி வங்கியின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 20ம் திகதி (பெப்ரவாி 20) நடாத்தப்பட்ட நண்பா்கள் வட்டத்தின் கல்வி அபிவிருத்தி நிலைய திறப்பு விழா நிகழ்வில் வைத்து 65 மாணவா்களுக்குமான சேமிப்பு புத்தகம் வழங்கப்பட்டடதுடன் சேமிப்பு பழக்கத்தின் முக்கியம் குறித்த கருத்துரையும் பெற்றோா்களுக்கு வழங்கப்பட்டது.