கிளிநொச்சி அக்கராயனை ஆண்ட குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்த முற்பட்டவர்களிடம் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் மாலையை பறித்தெறிந்த சம்பவத்தால் அக்கராயனில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
13ஆம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்த அக்கிராசன் என்ற குறுநில மன்னனுக்கு 2018 ஆம் ஆண்டு ஜூலை 05ஆம் திகதியாகிய இதே நாள் சிலை திறந்து வைக்கப்பட்டது.
சிலை திறக்கப்பட்ட நாளில் மன்னனுக்கு வணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் கிராமத்து மக்கள் எனப் பலரும் அங்கு பிரச்சனமாகியிருந்தனர்.
இன்றைய நாள் விடுதலைப்புலிகளின் கரும்புலிகளின் நினைவு நாள் என்பதால் நினைவு வணக்கம் செலுத்தவேண்டாம் என்று பொலிஸார் உட்பட்ட படைத்தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்
இருந்தபோதிலும் அதனையும் மீறி வணக்கம் செலுத்த முற்பட்டபோது அங்கு நின்றவர்கள் வைத்திருந்த மாலை மற்றும் மலர்களை படைத்தரப்பினர் பறித்து வீசியதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியிலேயே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.