விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையில் காணப்பட்ட தமிழ் பிழையை உடனடியாக திருத்தி தமிழ் மொழிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சர்களாக இருந்த எவரும், பெயர் பலகையில் காணப்பட்ட தமிழ் பிழையை சரிசெய்ய முன்வராத நிலையில் நாமல் ராஜபக்ஷ இதனை செய்துள்ளமையை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர்.
மேலும் நாட்டில் மும்மொழி கொள்கை நடைமுறையில் இருக்கின்றது என்பதை நாமலின் செயற்பாடு உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.