நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்று சரித்திரம் படைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கை தனக்கு உள்ளது என தெரிவித்த அவர் அனைவரும் கட்டாயம் வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், வடக்கு கிழக்கு மக்களின் ஏகோபித்த குரலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் தமிழ் மக்களின் உரிமைக்கான எமது குரல் தொடர்ந்தும் ஒலித்துக்கொண்டிருக்கும் எனவே இம்முறை எமது குரல்களுக்கு மக்கள் மேலும் வலுவடையச் செய்ய வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.