தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் நேற்று(டிசம்பர் 12) நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
சுமார் 10 இலட்சம் கடிதங்கள் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் மற்றும் நாட்டின் ஏனைய தபால் அலுவலகங்களிலும் தேங்கியுள்ளதாக அந்த முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 ஆம் திகதி பிற்பகல் முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாகவும் மத்திய தபால் பரிமாற்றகத்திலிருந்து எந்தவொரு தபால் பொருட்களையும் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.