ஓவ்வொரு பிரதேச செயலகங்களிலும் ஒவ்வொரு சுகாதார சேவை பணிமனை (MOH OFFICE) அமையப் பெறவேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய யாழ்ப்பாணத்தில் 14 பிரதேச செயலகங்களிலும் தனியான சுகாதார சேவை பணிமனைகள் செயற்படுகின்ற போதும், நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஏன் இந்த சுகாதார பணிமனை ஆரம்பிக்கப்படவில்லை? என்பது மக்கள் கேள்வியாக இருக்கின்றது.
வடமாகாண சபையின் முன்னாள் கௌரவ அளுநராக இருந்த மதிப்பிற்குரிய ரெஜினோல்ட் கூரே அவர்கள் ஆளுநராக இருந்த போது நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் கீழும் சுகாதார திணைக்களம் அமைவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. ஆயினும் இது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மக்கள் ஒவ்வொரு தேவைக்கும் வேலணை சுகாதார திணணக்களத்தினையே நாடாவேண்டிய தேவைப்பாடு காணப்டுகின்றது அதற்காக பல மணி நேரங்களையும் பணத்தினையும் செலவழித்து மக்கள் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
இன்று கொவிட் 19 நோயினால் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ள நெடுந்தீவில் தனியாக ஒரு சுகாதார உத்தியோகத்தரே அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு காண்பபடுகின்றது. தனியான சுகாதார சேவைகள் பணிமனை நெடுந்தீவில் அமையப்பபெறுமாயின் மக்களது சுகாதார குறைபாடுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு உடன் தீர்வு வழங்கப்படும்.
ஏனைய சில தீவுகளில் கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றிய போதும் நெடுந்தீவு வாழ் மக்களுக்கு இன்னும் தடுப்பூசி வழங்ப்படவில்லை ஏற்கனவே அண்மையில் வழங்குவதாக உறுதி மொழி வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவிலும் மிக விரைவாக தனியான சுகாதார சேவைகள் திணைக்களத்தினை ஆரம்பிக்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பது மக்களது கோரிக்கையாக காணப்படுகின்றது.