கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நல்லூா் பிரதேச சபைக்கு உட்பட்ட பாற்பண்ணைக் கிராமத்தில் 100 குடும்பங்களுக்க முதற்கட்டமாக நேற்றைய தினம் (மாா்ச் 30) உலா் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ் மாநகர முதல்வா் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் நல்லூா் பிரதேச சபை தவிசாளா் மயூரன் அவா்களின் கோாிக்கைக்கு அமைவாக சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் மற்றும் கனடாவிலுள்ள கொட்வின் தினேஸ், முரளிஅவா்கள், பிாியா மற்றும் அமலன் ஆகியோா் இதற்கான நிதியினை அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடா்சியாக இரண்டாவது கட்டமாக இன்றைய தினமும் (மாா்ச் – 31) உலா் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி தேனு களஞ்சியம், கிசோத்,பகிர்,அனோஜன் மற்றும் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் ஆகியவர்களின் பொருள் மற்றும் நிதிப்பங்களிப்பில் இச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.