பிற உயிர்களிற்காகவே தன்னை உருக்கி வாழ்ந்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் அறக்கொடை விழாவில் சிவத்தமிழ் விருது வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்புற இன்று(ஜனவரி 7) நடைபெற்றது.
இன்று காலை 9.00 மணிக்கு தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற விழாவின்போது பேராசிரியர் சி. சிவலிங்கராஜா, வைத்திய கலாநிதி. சி. அருளானந்தம், இளைப்பாறிய விரிவுரையாளர் திருமதி நாச்சியார் செல்வநாயகம், நாதஸ்வர வித்துவான் இ.கேதீஸ்வரன், இளைப்பாறிய அதிபர் மு.அருணாசலம் ஆகிய ஐந்து பெருந்தகைகள் சிவத்தமிழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.