டயலொக் அக்ஸியாட்டா (Dialog Axiata) மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட்(Bharti Airtel) ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒன்றிணைந்து இலங்கையில்அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில்கைச்சாத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளைடயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை அதற்குப் பதிலாக இதுவரையில்மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.35% பெறுமதியுடையசாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும் என டயலொக்நிறுவனம் நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இந்தஇணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுஅனுமதியளித்திருப்பது குறிப்பிட தகுந்த விடயமாகும்.