போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் மொத்தம் 12.2 பில்லியன் வைப்பில் உள்ளதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவானவினால் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எல்லே குணவன்சதேரர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று இடம்பெற்றபோதே போதகர் ஜெரோம்பெர்னாண்டோவின் வங்கிக்கணக்குகளில்உள்ள பணம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
போதகர் அண்மையில் உரையாற்றிய காணொளியில் புத்தபகவான் தொடர்பான கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதற்கமைய அவரை கைதுசெய்யுமாறு கோரி, புதிய பௌத்த முன்னணி என்ற அமைப்பு கொழும்பு கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.
குறித்த போதகருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிவித்துரு ஹெல
உறுமயவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்திருந்தது.
இந்தமுறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஜெரோம் இலங்கையில் இல்லாத நிலையில் அவரது வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து நீதிமன்றத்தில் அறிக்கையிட்டுள்ளது.